மனைவியை வாளால் வெட்டிய நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

மனைவியை வாளால் வெட்டி காயம் ஏற்படுத்திய சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை - நிலாவெளி பிரதேசத்திற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தினமும் மது பானம் அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்று மனைவியோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

மனைவியோடு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest Offers