வடிசாராயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா - கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து நேற்றிரவு கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா-02, ரஹ்மானியா நகரை சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் தெரியவருகிறது.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 1500 லீற்றர் கசிப்பு வடிசாராயத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் உரிய வடிசாராய போத்தலுடன் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Latest Offers