முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - உடையார்கட்டுப் பகுதியில் கமநல சேவை நிலையத்தினரால் 100 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

உடையார்கட்டு கமநல திணைக்களத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்பினை சேர்ந்த விவசாயிகளின் பிள்ளைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 31 மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்துள்ளதோடு, விவசாயிகளின் பிள்ளைகள் 69 பேர் உட்பட 100 மாணவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கி வைக்கப்பட்டு வங்கி புத்தகமும், பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.பிரவேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அமிர்தலிங்கம், உடையார்கட்டு மகாவித்தியாலய உதவி அதிபர் ரி.தரணிதரன் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஜே.ஜெயனாத் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers