கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்

Report Print Navoj in சமூகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகியன இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்நிலையில் அவ்வருடம் செப்டம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.