மஹிந்தவின் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஒருவர் பரிதாபமாக மரணம் - கொழும்பில் நடந்த விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

கூட்டு எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரடைப்பு காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 81 பேர் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க செய்தி திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தலைமையிலான குழுவினர் கொழும்பை முடக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அதிகளவானோர் குடிபோதையில் வீதியில் கிடந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலவச அம்புலன்ஸ் சேவை ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகஅமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers