மஹிந்த பேரணியில் கொலை முயற்சி அம்பலம்! ஒருவர் பலி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் பலர் சுகவீனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எடுத்து கொண்ட உணவு விஷமாகியதால் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெஹிஅத்தகண்டி பிரதேசத்தில் இருந்து சென்றவர்கள் சிலரே இவ்வாறு சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெஹிஅத்தகண்டி பிரதேசத்தில் இருந்து வந்தவர்களின் பேருந்தில் ஏறிய மர்மநபர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பால் பக்கட் தொகை ஒன்றை வழங்கியுள்ளனர். வழங்கியவர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.

இந்த பாலை அருந்திய அனைவரும் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பால் பக்கட்டில் சிறிய ஓட்டைகள் காணப்பட்டதாகவும், அதில் விஷ திரவியங்கள் கலந்த பின்னர் நுட்பமான முறையில் ஓட்டை அடைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பு வந்த மேலும் சிலருக்கு பாண் தொகை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை உட்கொண்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சுகயீனமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என கூறப்பட்ட போதிலும், உணவு விஷமாகியமையினால் இந்த நபர் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...