மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

Report Print Gokulan Gokulan in சமூகம்

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் ஹட்டன் d.k.w கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சத்தியேந்திரா, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் கணேஸ்ராஜ் மற்றும் ஹட்டன் கல்விப் பணிமனையின் மேலதிக கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதர், கல்வித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

Latest Offers