இலங்கை கடலில் மிதந்து வந்த ஆபத்தை ஏற்படுத்தும் பொதிகள்

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையின், இரணைதீவிற்கு இடதுபுற கடற் பகுதியில் மிதந்து வந்த பெரிய பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவை நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பொதிகளில் 284.5 கிலோகிராம் கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை நாளை மறுதினம் கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் பாரப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது.

இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருளான கஞ்சாவின் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers