பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! இரு இளைஞர்கள் கைது..!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் - வென்ராசன்புர மற்றும் வாத்தியாகம பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஐந்து நீர் இரைக்கும் இயந்திரங்கள், வீட்டு உபகரணங்கள் என்பவற்றை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.