முல்லைத்தீவில் மீனவ குடும்பங்களுக்கு படகுகளும், இயந்திரங்களும் வழங்கி வைப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு இன்று படகுகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் நிதி உதவியுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் பிரதாபன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் யாழில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் சந்தோஸ்வர்மா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 150 மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளும், 150 குடும்பங்களுக்கு படகு வெளி இணைப்பு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Latest Offers