லிந்துலையில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடுகள் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers