பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்கள் செய்து வந்த காரியம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முதலில் தம்பியா வீதி, பாலை ஊற்று பகுதியை சேர்ந்த சைட்டர் பிறீமன் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 10 சிவப்பு நிற போதை மாத்திரைகள், இரண்டுகிராம் கேரளா கஞ்சா என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞன் கொடுத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் மகாநாயபுரம், மட்கோ பகுதியை சேர்ந்த துவான் சலீம் முஹம்மட் இசான் (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 456 போதை மாத்திரைகள் மற்றும் மூன்று கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers