இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த இளைஞர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல் சோலை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி சமிலாகுமாரி ரத்னாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கும்புறுப்பிட்டி நாவற் சோலை பகுதியில் மரண வீடு ஒன்றில் மதுபோதையில் உட்கார்ந்திருந்த கருணதாஸ் ரமேஷ்(26) என்பவர், வேலைக்கு சென்று துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (52) நடராசா தயாளன் என்பவரை அழைத்தபோது அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

நிறுத்தாமல் சென்றதால் கோபமடைந்த கருணதாஸ் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசத்தினால் அடித்துள்ளார்.

இதன் பின்னர் அவரை மீண்டும் மண்வெட்டியால் தலையில் தாக்கியதால் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் இன்று சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் நாளைய தினம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும், பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Latest Offers