யானைகள் செய்யும் அட்டகாசத்தால் திணறும் பாதசாரிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

புத்தல - கதிர்காமம் வீதியில் யானை மற்றும் குட்டிகள் விளையாடி மகிழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களை மறிக்கும் யானைகள் உணவுகளை பறித்து செல்கின்றன.

யானைகள் இவ்வாறு உணவு பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்டுள்ளதாகவும், யானை குட்டிகள் வீதி செல்லும் வாகனங்களுக்குள் தலையை விட்டு விளையாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அந்த வீதியில் பயணித்த முச்சக்கரவண்டிக்குள் யானை ஒன்று தும்பிக்கையை நீட்டியமையினால் சாரதி முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே விட்டு சென்றுள்ளார்.

தும்பிக்கை முச்சக்கர வண்டிக்குள் சிக்கியுள்ளமையினால், வெளியே எடுத்து கொள்ள முடியாமல் முச்சக்கரவண்டியை கீழே சாய்த்து வெளியே எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers