கொழும்பில் மக்களை கொலை செய்ய திட்டம்! வெளியான ஆதாரத்தினால் அதிர்ச்சி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வழங்கப்பட்ட விஷம் கலந்த பால் பக்கெட் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டு எதிர்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்ட விஷம் கலந்த பால் பக்கட்டுகளுக்கு சமமான பால் பக்கட்டுகள் தொகை ஒன்று வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

பத்தரமுல்ல, உடுமுல்ல வீதியின் இடைப்பட்ட வீதிக்கு அருகில் விட்டு செல்லப்பட்ட நிலையில் இந்த பால் பக்கட்டுகள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 5ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, மர்மநபர்களினால் மாளிகாவத்தை, யூனியன் பிளேஸ். கங்காராம உட்பட கொழும்பின் பல நகரங்களில் பால் பக்கட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

இந்த பாலை அருந்திய 38 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சகிசிச்சை பெற்று கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிய நிலையில் தற்போது ஒரு தொகை பால் பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் சிறிய ஓட்டைகள் உள்ளதாகவும், அதன் ஊடாக விஷம் கலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Latest Offers