தாய்லாந்து அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பிரஜை

Report Print Kamel Kamel in சமூகம்

போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜை ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சாலிய பெரேரா என்ற நபரே இவ்வாறு தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தவர் என்பது அவரது கடவுச்சீட்டை பரிசோதனை செய்த போது தெரியவந்தது என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இந்த நபரை கைது செய்ததாக, இன்றைய தினம் தாய்லாந்து பொலிஸார் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் இன்டர்போல் ஊடாக குறித்த இலங்கைப் பிரஜையை கைது செய்து ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த நபர் தாய்லாந்தில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சந்தேக நபர் பாரியளவில் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers