மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் கதறும் மனைவி

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகபிரிவுக்கு உட்பட்ட அன்னாமலை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னராசா சதீஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிணக்கு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.