மதம் பிடித்த யானையின் அட்டகாசம்! தலைதெறிக்க ஓடிய மக்களால் பதற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தளையில் நடைபெற்ற பெரஹர ஒன்றில் யானை ஒன்று குழப்பம் அடைந்துள்ளமையினால் மக்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலேவெல, பம்பாவ ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹர வீதி ஊர்வலத்தில் சென்ற யானை ஒன்று குழப்பமடைந்துள்ளது.

இதனால் பதற்றமடைந்த மக்கள் ஓட ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் தேரர் ஒருவர் உட்பட 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 பேர் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள 3 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யானையின் தாக்குதலில் லொரி ஒன்றும், முச்சக்கரவண்டிகள் இரண்டும், சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers