இளைஞனை கடத்திச் சென்று பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!

Report Print Vethu Vethu in சமூகம்

ஹுங்கம பகுதியில் பெண் உட்பட நான்கு பேர் இளைஞன் ஒருவரை ஏமாற்றி காட்டுக்குள் அழைத்துச் சென்றமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறித்த குழுவினர் காட்டுக்குள் அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளார். இளைஞனின் தொலைபேசியையும் திருடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கையடக்க தொலைபேசி கொள்ளையை நாடகம் போன்று செய்துவிட்டு அதனை மீளவும் உரிய இளைஞனிடம் வழங்கியுள்ளனர்.

எனினும் நான்கு பவுண் தங்க நகையை கொள்ளையடித்த விட்டு திரும்பி வழங்காமல் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். அத்துடன் அந்த இளைஞனின் வங்கியில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வெட்டிய பிரதேச இளைஞனின் முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 3 இளைஞர்கள் மற்றும் யுவதியை கைது செய்துள்ளனர்

குறித்த யுவதி சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமான பெண் எனவும், அவரது கணவர் கைவிட்டு சென்றுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய இரண்டு இளைஞர்களும் அங்குனுகொலபெலஸ்ஸ பிங்கம மற்றும் எரமினியாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.