பாதை எது.. குழி எது..? ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - கொட்டகலை 60 அடி பாலத்திலிருந்து அந்தோணிமலை வரையான சுமார் 05 கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைத்து தருமாறு கோரி ஆரப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆரப்பாட்டம் இன்று காலை 09 மணியளவில் அந்தோணிமலை தோட்ட பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், அவர்கள் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் குறித்த வீதி மிகவும் மோசமான நிலையில் பாதை எது, குழி எது என்று தெரியாத அளவிற்கு காணப்படுகிறது.

இப்பாதையினை அந்தோணிமலை, கவாலமலை, கல்கந்தை, பளிங்குமலை, யதன்சைட் போன்ற தோட்டங்களை கொண்ட 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் இப்பகுதியை கடக்கும் போது தங்களின் பாதணிகளை கழட்டிக் கொண்டு செல்லும் அவலநிலை பல வருடங்களாக தொடர்கிறது.

பாதையினை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவித நவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers