தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன், வீதிகளில் டயர்களும் எரிக்கப்பட்டன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.