இலங்கை அரசால் தேடப்படும் முக்கிய நபர் வெளிநாட்டில் கைது! நாடு கடத்துவதற்கு நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டுவந்த சாலிய பெரேரா ஆராச்சி என்ற இலங்கையர், தாய்லாந்தின் பாங்கொக் நகரில் வைத்து சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலிய பெரேரா விவல ஆராச்சிகே என்ற நபர் கடந்த வியாழக்கிழமை Chong Nonsi பகுதியில் உள்ள Sathu Pradit Soi 19 என்ற ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர், இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.

எனினும் 2013 ஆண்டிலேயே குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பியோடியிருந்ததால் இலங்கை பொலிஸார் அவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த நபர் தற்போது தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers