இலங்கை வந்த வெளிநாட்டுத் தூதுவர் தலைதெறிக்க ஓடிய பரிதாபம்! கொழும்பில் சுவாரஸ்ய சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தூதுவர் நாய் கடிக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்வதற்காக வீதியில் ஓடிய தூதுவரை, நாய் ஒன்று கடித்துள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் நடைபெற்றது. அன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தூதுவர் காலை வேளையில் உடற்பயிற்சிக்காக ஓடும் வீதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை செய்துள்ளனர். இதன்காரணமாக வேறு வீதியில் அவர் ஓடியுள்ளார். இதன் போதே அவர் நாய்க் கடிக்கு உள்ளாகி உள்ளார்.

நாய் கடிக்குள்ளான தூதுவர் அந்த வீதியிலேயே மீண்டும் வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார். அவ்வாறு ஓடியவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers