நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் கோத்தபாய ராஜபக்ச

Report Print Kamel Kamel in சமூகம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலையான மூவர் அடங்கிய உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காணி அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷான் டி சில்வா உள்ளிட்டோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.

தங்காலை வீரகெட்டிய மெதமுலன டி.ஏ.ராஜபக்ச நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் என்பவற்றை உருவாக்க 33 மில்லியன் அரசாங்க பணம் மோசடியாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இந்த மனு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இன்றைய தினம் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.