விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நாய்க்கும், பெண்ணுக்கும் ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Shalini in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய குவைத் நாட்டு தம்பதியினரில் பெண்ணுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதற்றத்திற்கு காரணமாக இருந்த நாயை விடுவிப்பதற்கும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு குவைத் நாட்டு தம்பதியினர் சுற்றுலா வரும் போது தமது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்து வந்துள்ளனர்.

இதன்போது நாயை கொண்டு வருவதற்கான சுங்க அறிக்கையை பெறாத காரணத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கும், குவைத் நாட்டு தம்பதியினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டிருந்தது.

இலங்கை சட்டத்தின் பிரகாரம் அந்த நாயை சுங்க அதிகாரிகள் 3 நாட்கள் விலங்கியல் பராமரிப்பு நிலையத்தில் வைத்து சோதனை செய்ய வேண்டும்.

எனினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு நாயுடன் வெளியேற முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிரான பிரத்தியேக வழக்கு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதன்படி வளர்ப்பு நாயை விடுவிப்பதற்கு 15,000 ரூபாய் தண்டப்பணமும், தாக்குதலை மேற்கொண்ட பெண்ணுக்கு 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கவும் இலங்கை சுங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

Latest Offers