கணபதிப்பிள்ளை மோகனை புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராக நிபந்தனை

Report Print Navoj in சமூகம்

அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவரை எதிர்வரும் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நேற்று ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகியதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்ச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதி வழங்கபட்டுள்ளதுடன் இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கையெடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers