எட்டு நாட்களாக பிணவறையில் ஆசிரியையின் சடலம்! வளர்ப்பு மகன் தலைமறைவு

Report Print Manju in சமூகம்
200Shares

சிறிது காலம் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் சடலத்தை பாரம் எடுக்காமல் அவருடைய வங்கிப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்ற வளர்ப்பு மகன் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரணத்தினால் உயிரிழந்த ஆசிரியையின் சடலம் இன்று வரை கடந்த 8 நாட்களாக பிரேத பரிசோதனைகள் செய்யமுடியாமல் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை குறித்த நபரை தமது மகனைப்போல வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இதற்கு முன்னர் ஆசிரியையிடம் பணம்கேட்டு, கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விரக்திடைந்த ஆசிரியை தனக்குச் சொந்தமான இடத்தினை விற்பனைசெய்து அதில் கிடைத்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.

வத்தளை, ஹெந்தலை புவக்வத்த வீதியில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் தனது மிகுதியான காலத்தைக் கடத்தியுள்ளார்.

இந்தநிலையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் சடலத்தை வேறொரு ஆசிரியரின் சகோதரரின் மகன் மரண பரிசோதனை செய்ய பாரமெடுக்க முன்வந்துள்ளார்.

எனினும், உயிரிழந்த ஆசிரியையின் கணவரும் இறந்துவிட்டதால், அவரால் வளர்க்கப்பட்ட மகனை முன்னலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு மரண பரிசோதகர் கட்டளையிட்டுள்ளார்.

அதன்படி குறித்த நபர் குறுந்தம்குளம்- மிகிந்தலாவ பிரதேசத்தில் வசிப்பதாக கிடைத்த தகவலுக்மைய அவரது உறவினர்களால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வருவதற்கு மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து உறவினர் பணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்த பிறகு அவர் கடந்த 5ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் மகன் என்று கூறப்படும் குறித்த நபரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறந்த ஆசிரியர் பற்றிய தகவல்களை சரிபார்த்த பின்னர் ஆரம்ப விசாரணையை தொடங்கியுள்ளனர். அன்றைய தினம் மரண பரிசோதனையை முடிக்க நேரம் இல்லாததால் அடுத்த நாள் காலை 9 மணிக்கு மரண பரிஷசொதனையை ஆரம்பிக்க முடிவு செய்திருந்த நிலையில், அடுத்த நாள் காலையில் வளர்ப்பு மகன் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.