59 வயது மணமகனுக்கும், 60 வயதான மணமகளுக்கும் திருமணம் செய்து வைத்த ஜனாதிபதி

Report Print Kamel Kamel in சமூகம்

59 வயதான மணமகன் ஒருவருக்கும், 60 வயதான மணமகள் ஒருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் திருமணம் செய்து வைத்தார்.

அம்பலான்தொட்டை பிரதேச செயலகத்தை இன்றைய தினம் ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இதன் போது 40 ஆண்டுகளாக சட்ட ரீதியாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாத தம்பதியொன்றுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த தம்பதியினருக்கு ஏழு பிள்ளைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலான்தொட்டை ஹூங்கம துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான பதிரனகே பிரேமரட்ன மற்றும் 60 வயதான கமகே மாலினி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டர்.

இந்த தம்பதியினரின் ஆறு பிள்ளைகள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1100 லட்சம் ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மானிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Latest Offers