ஓமந்தையில் முட்டைகளுடன் சென்ற வாகனத்திற்கு ஏற்பட்ட நிலை

Report Print Theesan in சமூகம்

வவுனியா ஓமந்தை பகுதியில் கன்டர் ரக வாகனம் ஒன்று இன்று காலை தடம்புரண்டு விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகளை ஏற்றி வந்த கனடர் வாகனம் ஒன்றே தடம்புரண்டுள்ளது.

வாகனத்தில் சென்ற இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலே இந்த வாகனம் தடம்புரண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers