வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்றில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இன்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லீலாரத்தின மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபருக்கெதிராக கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்று நடைபெற்று வந்த நிலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகம் அளிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற நீதிவான் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Latest Offers