கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் 7வது அமர்வில் தலைமைத்தாங்கி இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சபை நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற மற்றும் சபையினை சீராக கொண்டு செல்வதற்கு இடையூறாகவும், சில ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர்.

தவறான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குகின்றனர். ஊடகங்களின் பெயர்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக செயற்படுகின்றனர்.

எனவே இவர்களின் நிலைப்பாடு தொடர்பில் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.