அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத திணைக்கள தலைவர்கள்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆதங்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது திணைக்கள தலைவர்கள் பலர் கலந்துகொள்ளாமையினால் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விசனம் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக திணைக்கள தலைவர்களை அழைத்து செயற்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இணைத்தலைவரான சிவசக்தி ஆனந்தன் கேட்டபோது,

“திணைக்கள தலைவர்கள் பிரசன்னமாகியிருக்காமையினால் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய முடியாத நிலைமை ஏற்பட்டது. பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்கள் முக்கியமானவை என்பதனால் திணைக்கள தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

இங்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட சில அரச அதிகாரிகளும் பிரசன்னமாகியிருக்கும் போது பல திணைக்கள தலைவர்கள் வராது விட்டால் கூட்டம் பயனற்றதாகிவிடும். எனவே பிரதேச செயலாளர் இது தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டும்” என தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இணைத்தலைவர்கள் 5 பேர் உள்ள போதிலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் மாத்திரமே கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers