திருகோணமலையில் வாகன விபத்து! பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் இன்று(10) பகல் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் திருகோணமலை பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers