யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மூவர் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கஞ்சா போதைப் பொருள் இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 102கிலோ கிராம் கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers