இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையும் நேற்று நள்ளிரவுடன் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 92 ஒக்டேய்ன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேய்ன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 133 ரூபாவாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது.

Latest Offers