கால போக செய்கையை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்

Report Print Vamathevan in சமூகம்

கால போக பயிர் செய்கை ஆரம்பமாவதை முன்னிட்டு விவசாயிகளுடன் விசேட கலந்துரையாடல் உரும்பிராய் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்றுள்ளதுடன், இதன்போது விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டுள்ளார்.

கலந்துரையாடலின் போது, விவசாயிகளுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நெல் விதை களஞ்சியசாலை அமைக்கப்பட வேண்டும். விதை நெல் யாழ் மாவட்ட பயிர் செய்கையாளர்களுக்கு பெற்றுத்தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் கமநல சேவை பிரதேச விவசாய உற்பத்தியாளர்களும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளினால் பயிர் சேதம் அடைவதாகவும் விவசாயிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விலங்குகளின் தாக்கங்களினால் 40 சத விகிதம் பயிர் செய்கை பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. விலங்குகளினால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு கமநல சேவை நிலைய திணைக்களம் ஊடாக, கமக்கார அமைப்பின் ஒத்துழைப்புக்களுடன், முன்மாதிரியான நடவடிக்கை பெற்றுத்தரப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers