பெரும்பான்மை மக்களின் சட்டவிரோத குடியேற்ற பகுதிக்கு உடன் நடவடிக்கை

Report Print Mubarak in சமூகம்

புல்மோட்டை 13ம் கட்டை பகுதியில் சட்ட விரோதமாக பெரும்பான்மை மதகுருவினால் பதவி சிறிபுர மற்றும் தென் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகளில் அத்துமீறி குடியேரி வருகின்றனர்.

இது விடயமாக இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஜனாதிபதியின் செயலாளருக்கு தொலைபேசி மூலமாக பேசியதை அடுத்தும் அவசர தொலை நகல் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு சட்ட விரோத குடியேற்றங்களை நிறுத்தும்படி உத்தரவிட்டதிற்கு அமைவாக பிரதேச குச்சவெளி பிரதேச செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்பான கிராம சேவகர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிக்கு உடன் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பிரதேச செயலாளர் சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிசைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டுள்ளார்.

உடன் கிராம சேவையாளருக்கு அறிக்கை தயாரித்து உடன் வன பரிபாலன திணைக்களம் புல்மோட்டை பொலிஸ் நிலையம் அரசாங்க அதிபருக்கு சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றும்படி அடங்கிய கடிதத்தை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

Latest Offers