மஹிந்த தலைமையில் கொழும்பில் நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்க நிறுவனத்தில் பணியாற்றும் 42 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு நிர்வாக அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழியர் சங்கத்தின் அழுத்தத்திற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர் மற்றும் செயலாளர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உரிய முறையில் விடுமுறை பெற்றுக் கொண்டே ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மேலும் சில அரச நிறுவனங்கள் அன்றைய தினம் சேவைக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும். எனினும் அன்றைய தினம் சேவைக்கு அறிவிக்காதவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களுக்கமைய சேவைக்கு அறிவிக்காதவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.