சர்வதேச திரைப்படத்துறையை வியப்பில் ஆழ்த்திய ஈழத்தமிழன்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றைப் பனைமரம் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகி விருதுகளையும் வென்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த படம் இதுவரையில் 10 சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகியுள்ளதுடன், இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது.

இந்த படத்தை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனுக்கு சென்றுள்ள ஈழத்தமிழரான புதியவன் ராசையா இயக்கியுள்ளார்.

புதியவன் ராசையா 2001ஆம் ஆண்டு மாற்று என்ற படத்தை இயக்கி தனது திரைப்படத்துறை பாதையை ஆரம்பித்து 2018ஆம் ஆண்டில் ஒற்றைப் பனைமரம் படத்தை இயக்கி பயணத்தை தொடர்ந்து வருகிறார்.