காதலிக்கும் ஜோடிகளிடம் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லேவெல நீர்த்தேக்கத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட காதல் ஜோடியினர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கமைய கலேவெல பொலிஸ் அதிகாரி உட்பட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தகவல் வழங்கிய ஜோடியின் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.
மேலதிக வகுப்பு என கூறிவிட்டு காதலிக்க வரும் ஜோடிகளை இலக்கு வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காதல் ஜோடிகளை அச்சுறுத்தி இவ்வாறு பணம், நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து பல கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.