யாழில் சிறப்பிக்கப்பட்ட பாரதியாரின் நினைவு தினம்

Report Print Sumi in சமூகம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். நல்லூர் அரசடியில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச்சிலை முன்பாக இந்த கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது பிரதம அதிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களால் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், பாரதியார் கீதங்களும் இசைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வட மாகாணசபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் சமயத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.