சுற்றிவளைப்பின் போது வசமாக சிக்கிக் கொண்ட நபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
94Shares

திருகோணமலை - மொறவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற சந்தேகநபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், லைட் வீதியை சேர்ந்த சந்திராபதி தேதர திமுது தாரக்க வீரசிங்க (43 வயது) என்பவரிடமே இவ்வாறு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மொரவெவ குளத்திற்கு அருகில் உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இயந்திரத்துடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.