வெடிப்பு சம்பவத்தில் பெண் படுகாயம்

Report Print Steephen Steephen in சமூகம்

பொகவந்தலாவ பகுதியில் குப்பையில் இருந்த பொருள் ஒன்று வெடித்து சிதறியத்தில் பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலவை தோட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் குப்பைக்கு தீ மூட்டும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த பெண் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் குறித்து பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers