கேரளா கஞ்சாவுடன் பிடிப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா-புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மணல் ஏற்றும் நபர்களுக்கு கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 20 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபரை இன்று பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers