உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி

Report Print Theesan in சமூகம்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலையை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

உளநல பிரிவின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்ட குறித்த பேரணி வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையில் இருந்து ஆரம்பமாகி நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிறைவடைந்துள்ளது.

இதில் வவுனியா வைத்தியசாலை உளநல சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்வியற்கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.