மான் இறைச்சியுடன் பிடிப்பட்ட நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ மான் இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறு இன்று திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

எத்தாபெந்திவெவ பகுதியை சேர்ந்த கசும் பிரசன்ன பத்மலால் (30 வயது) என்பவரிடமே இவ்வாறு தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி மோட்டார் சைக்கிளில் இறைச்சியை கொண்டு வரும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.