கிளிநொச்சி மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு உருவாக்கம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - கரடிபோக்கு சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும், தீயணைப்புக்குரிய வாகனங்கள் உள்ளிட்டன உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்தையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றின் தேவை குறித்து பல தரப்பினர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அமைச்சின் ஊடாக 97 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சுரேஸ், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, தவநாதன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers