காதலியை கொலை செய்துவிட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசென்ற நபர்

Report Print Manju in சமூகம்
202Shares

யுவதியொருவரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரொருரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சட்டவிரோத காதல் தொடர்பு காரணமாக யுவதியொருவரை அடித்துக் கொலைசெய்து அவரை விபத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி சந்தேக நபர் வைத்தியசலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்க சமர்ப்பிக்குமாறு ஊரகஸ்மங்ஹந்திய பொலிஞாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பரப்புவ, பலகஸ் –கொஸகொட பிரதேசத்தில் வசிக்கும் திலான் ஜயசிங்க (27) என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மங்ஹந்திய யட்டகல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சுரங்கி சந்தமாலி என்ற யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சநதேக நபர் ஏற்கவே திருமணமானவர் எனதெரிவிக்கப்படுகிறது.

திருமணமாகாத குறித்த யுவதியுடன் நீண்டகாலமாக காதல்தொடர்பில் இருந்ததாகவும் சநதேக நபருக்குசொந்தமாக வானில் பலவேறு இடங்களுக்கு இருவரும் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 12ம் திகதி ஆடைத்தொழிற்சலைக்கு வேலைக்குச் சென்ற குறித்த யுவதி வேலை முடிவடைந்ததும் இரவுவேளை வீட்டிற்கு திரும்பி வரும்போது சந்தேக நபர் வானில் வந்து யுவதியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுவதி காதலனான சந்தேக நபரின் முகத்தில் அறைந்ததாகவும் கோபம் அடைந்த நபர் வாகனத்தின் ஜக் லிவரைக் கொண்டு யுவதியைத் தாக்கியுள்ளார்.

தலையில் தாக்கியதாகவும் அது தவறுதலாக யுவதியின் கழுத்தில் விழுந்துள்ளதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து யுவதியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.