தம்புள்ளை வைத்தியசாலையை ஆக்கிரமித்துள்ள மூட்டைப்பூச்சிகள்

Report Print Manju in சமூகம்

தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உள்ள வாட்டில் மூட்டைப்பூச்சியின் ஆக்கிரமிப்பு காரணமாக வாட்டில் தங்கியிருக்கும் நோயாளிகள் இரவு வேளைகளில் நித்தரையின்றி இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பரேஸன் பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாட்டிலும் இலக்கம் 7 மற்றும் இலக்கம் 8 வாட்டிலும் மூட்டைப்பூச்சிகள் மிகவும் தீவிரமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி வைத்தியர்களும் தாதிமார்களும் தங்கியிருக்கும் அறைகளிலும் மூட்டைப்பூச்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஒப்பரேசன் பிரிவில் நோயாளிகளை சிகிச்சைக்குட்படுத்தும் போது நோயாளிகள் மட்டுமின்றி தாதி மற்றும் வைத்தியர்களும் சௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாத்தளை சுகாதார பணிப்பாளர் ஊடமொன்றுக்கு தெரிவிக்கையில்,

தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்னரும் இவ்வாறு மூட்டைப்பூச்சிகள் ஆக்கிரமித்து காணப்பட்டன. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இரசாயன மருந்துகள் வீசி மூட்டைப்பூசிகள் அழிக்கப்பட்டன. அதன்பின்னர் வைத்தியசலையில் இருந்த தலையணைகள் மற்றும் மெத்தைகள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன.

அதன்பின்னர் புதிதாக எல்லாம் வாங்கி கொடுக்கப்பட்டது. வாரத்திற்கொரு முறை நீராவியில் அவிக்குமாறு அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

எனினும் மீண்டும் மூட்டைப்பூச்சிகள் பரவியுள்ளதாக வைத்தியசலையிலிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.