இலங்கையிலிருந்து சட்டவிரோமாக வெளிநாடு சென்ற பலர் கடற்படையினரால் கைது!

Report Print Steephen Steephen in சமூகம்
393Shares

இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த சிலரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நீர்கொழும்புக்கு மேற்கு திசையில் கடலில் சென்றுக்கொண்டிருந்த படகை கடற்படையினர் இன்று காலை சுற்றிவளைத்துள்ளனர்.

அதில் பயணித்த 88 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நாட்டின் பால்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஆபிரிக்கா கண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியான ரியூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.